ஹெபா படேலின் ஹாரர் படம் ’இஷா’.... கிளிம்ப்ஸ் வெளியீடு
இந்தப் படம் வருகிற 12 ஆம் தேதி திரைக்கு வருகிறது.;
சென்னை,
ஹெபா படேல், திரிகுன், அகில் ராஜ், சிரி ஹன்மந்த் மற்றும் பிருத்விராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் ஹாரர் படம் ’இஷா’. ஸ்ரீனிவாஸ் மன்னே இந்த படத்தை இயக்குகிறார்.
எச்விஆர் புரொடக்சன்ஸ் என்ற பதாகையின் கீழ் பொட்டுலா ஹேமா வெங்கடேஸ்வர ராவ் இந்த படத்தை தயாரிக்கிறார். ஆர்.ஆர். துருவன் இசையமைக்கிறார்
இந்தப் படம் வருகிற 12 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், இப்படத்திலிருந்து ஒரு கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி இருக்கிறது. அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.