நடிகை சுனைனாவுக்கு திருமணமா? - புகைப்படம் வைரல்

ஒருவருடன் கைகோர்த்தபடி இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் சுனைனா வெளியிட்டார்.;

Update:2024-06-07 07:15 IST

image courtecy:instagram@thesunainaa

சென்னை,

தமிழில் காதலில் விழுந்தேன் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சுனைனா. தொடர்ந்து மாசிலாமணி, திருத்தணி, வம்சம், நீர்ப்பறவை, தெறி, கவலை வேண்டாம், ரெஜினா, சில்லுக்கருப்பட்டி, தொண்டன், லத்தி உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

தெலுங்கு படங்கள் மற்றும் வெப் தொடர்களிலும் நடித்துள்ளார். சுனைனாவுக்கு தற்போது 35 வயது ஆகிறது. ஆனாலும் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருக்கிறார். ரசிகர்களும் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள் என்று தொடர்ந்து கேள்விகள் எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில் ஒருவருடன் கைகோர்த்தபடி இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் சுனைனா வெளியிட்டார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. இதன் மூலம் அவருக்கு திருமணம் முடிவாகி விட்டதாக தகவல் பரவி உள்ளது. வலைத்தளத்தில் பலரும் சுனைனாவுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்