எனக்கு மாரடைப்பா? நடிகர் விமல் விளக்கம்

விமலுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக இணையதளங்களில் தகவல் பரவின. இதற்கு நடிகர் விமல் விளக்கம் அளித்துள்ளார்.;

Update:2023-01-07 08:27 IST
எனக்கு மாரடைப்பா? நடிகர் விமல் விளக்கம்

தமிழில் கில்லி, கிரீடம், குருவி, பந்தயம் உள்ளிட்ட படங்களில் துணை நடிகராக வந்து பாண்டிராஜ் இயக்கிய 'பசங்க' படம் மூலம் கதாநாயகனாக உயர்ந்தவர் விமல். தொடர்ந்து வாகை சூடவா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, புலிவால், ஜன்னல் ஓரம், கலகலப்பு, மஞ்சப்பை உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்துள்ளார். வெப் தொடரிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் விமலுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் இணையதளங்களில் தகவல் பரவி திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் விமலை தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்தனர்.

இதுகுறித்து விமல் கூறும்போது, "எனக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. யாரோ இந்த தவறான தகவலை கிளப்பி விட்டுள்ளனர். சில தினங்களுக்கு முன்பு எனக்கு லேசான இருமல் ஏற்பட்டது. இதற்காகவே ஆஸ்பத்திரிக்கு சென்றேன். இப்போது நான் நலமாக இருக்கிறேன்'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்