படத்துக்கு செலவு வைக்கிறேனா? வதந்திக்கு விளக்கம் அளித்த அட்லி
வதந்திகள் குறித்து இயக்குனர் அட்லி விளக்கம் அளித்துள்ளார்;
Image Credits: Instagram.com/atlee47
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள 'ஜவான்' படம் திரைக்கு வந்துள்ளது. இந்த நிலையில் அட்லி அளித்துள்ள பேட்டியில் ''சினிமாவில் தென்னிந்திய, வட இந்திய படங்கள் என்ற வித்தியாசம் இல்லை. தமிழ் படத்தை எடுத்தபோது இருந்த உணர்வுகளே, இந்தி படத்தை இயக்கிய போதும் இருந்தது.
நான் படங்களுக்கு அதிக செலவு வைப்பதாக வதந்திகள் உள்ளது. அந்த குற்றச்சாட்டில் உண்மை இல்லை. நான்கு தயாரிப்பாளர்களிடம் பணியாற்றி உள்ளேன். அவர்கள் மீண்டும் என்னை வைத்து படம் எடுக்க தயாராக உள்ளனர். அவர்களை கஷ்டப்படுத்தி இருந்தால் மீண்டும் படம் எடுப்பார்களா?
என்னைப்பற்றி பேசுபவர்கள் பேசத்தான் செய்வார்கள். நம் பாதையில் கவனமாக இருந்தால் போதும். ஷாருக்கான் படத்தை நான் இயக்கியது ஆச்சரியமான விஷயம். 'ஜவான்' படத்தின் கதாநாயகன், தயாரிப்பாளர் என்ற முறையில் நாயகியை ஷாருக்கானே முடிவு செய்து இருக்கலாம். ஆனால் நான் நயன்தாரா என்று சொன்னதும் உடனே ஒப்புக்கொண்டார்.
தென்னிந்திய கலைஞர்கள் மீது ஷாருக்கானுக்கு அன்பும், மரியாதையும் இருக்கிறது. 'ஜவான்' படவேலைகளில் மூன்று வருடங்கள் இருந்து விட்டேன். நான்கு மாதம் ஓய்வு எடுத்தபிறகு அடுத்து என்ன செய்யப்போகிறேன் என்பதை தெரிவிப்பேன்'' என்றார்.