வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை வாங்கிய நெட்பிளிக்ஸ்
ரூ.7.44 லட்சம் கோடிக்கு நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளது;
சென்னை,
உலகளாவிய ஓடிடி தளங்களில் முன்னணி நிறுவனமான நெட்பிளிக்ஸ், ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பு மற்றும் பொழுதுபோக்கு துறையின் ஜாம்பவான் நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தைக் கையகப்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது
வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை ரூ.7.44 லட்சம் கோடிக்கு நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ஸ்டூடியோக்கள், எச்பிஓ மேக்ஸ் (HBO Max) ஓடிடி தளம் உள்ளிட்டவை இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.
அடுத்த 12-18 மாதங்களில் ஒப்பந்தத் தொகை கைமாற்றப்படும் என நெட்பிளிக்ஸ் தெரிவித்துள்ளது.