டேவிட் பெக்கம் - நடிகர் ஷாருக்கான் சந்திப்பு

மும்பையில் உள்ள ஷாருக்கான் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது.;

Update:2023-11-18 01:24 IST

மும்பை,

உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா மோத உள்ளன. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நாளை மதியம் 2 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

இதனிடையே, உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை காண இங்கிலாந்து கால்பந்து ஜாம்பவான் டேவிட் பெக்கம் இந்தியா வந்துள்ளார். அவர் இந்தியா-நியூசிலாந்து இடையேயான அரையிறுதி ஆட்டத்தை கண்டுகளித்தார்.

இந்நிலையில், நடிகர் ஷாருக்கானை டேவிட் பெக்கம் நேற்று சந்தித்தார். மும்பையில் உள்ள ஷாருக்கானின் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்