ஐஸ்வர்யா ராயின் மகள் வழக்கு : டெல்லி ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு...!

தனது உடல்நிலை குறித்து போலியான புகார் அளித்ததை எதிர்த்து ஐஸ்வர்யா ராயின் மகள் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Update: 2023-04-20 10:32 GMT

புதுடெல்லி

அமிதாப் பச்சனின் பேத்தியும் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராயின் மகளான ஆராத்யா பச்சனுக்கு 12 வயதாகிறது. அடிக்கடி அம்மா ஐஸ்வர்யா ராயுடன் விருது விழாக்களுக்கும், சினிமா விழாக்களுக்கும் குழந்தையாக இருந்ததில் இருந்தே சென்று வருகிறார்.

இந்நிலையில், அவர் குறித்து தவறான வதந்தி ஒன்றை 10க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் பரப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை சும்மா விடக் கூடாது என நினைத்து ஐஸ்வர்யா ராயின் மகள் துணிந்து செய்துள்ள காரியம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யாவின் உடல்நலம் சரியில்லை என்றும் அவருக்கு அரிய வகை நோய் உள்ளதாகவும் யூடியூப் சேனல்கள் சமீபத்தில் வதந்தி ஒன்றை பரப்பின.

இந்நிலையில், தவறான உள்நோக்கத்துடன் இப்படியொரு வதந்தியை பரப்பிய சுமார் 10 யூடியூப் சேனல்கள் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார். அந்த வீடியோவை டெலிட் செய்ய வேண்டும் என்றும் மேலும், அவர்கள் செய்த தவறுக்கு உரிய தண்டனையை வழங்க வேண்டும் என ஆராத்யா பச்சன் வழக்கறிஞர்களான ஆனந்த் மற்றும் நாயக் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

ஆராத்யா தான் மைனர் என்பதால் ஊடகங்களில் இதுபோன்ற செய்திகளை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி இருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

ஆராத்யா பச்சனின் ஆட்சேபனைக்குரிய வீடியோக்களை வெளியிடுவதை இணையதளங்கள் நிறுத்த டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஐகோர்ட்டு நீதிபதி சி. ஹரி சங்கர் கூறியதாவது:-

பிரபலங்களின் குழந்தையாக இருந்தாலும் சரி, சாமானியரின் குழந்தையாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு குழந்தையும் மரியாதையுடன்நடத்தப்படுவதற்கு உரிமை உண்டு. குழந்தையின் மன மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்து தவறான தகவல்களை பரப்புவது முற்றிலும் சகிக்க முடியாதது என கூறினார்

Tags:    

மேலும் செய்திகள்