விடுதலை திரைப்படத்திற்கு தினேஷ் கார்த்திக் பாராட்டு

படத்தில் அனைவரும் நன்றாக நடித்துள்ளனர். படம் சூப்பர் ஹிட் என்று தெரியும் இருந்தாலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். என்று கூறினார்

Update: 2023-04-08 11:44 GMT

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த மார்ச் 31-ந்தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'விடுதலை-1'. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்திற்கு ரஜினி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், 'விடுதலை' திரைப்படம் பார்த்த இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் படக்குழுவை பாராட்டி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, படம் மிகவும் நன்றாக இருந்தது. நான் 'பொல்லாதவன்' திரைப்படத்தில் இருந்தே வெற்றிமாறனோட மிகப்பெரிய ரசிகன்.

எப்போதும் போல் கலக்கலாக படத்தை எடுத்துள்ளார். படத்தில் அனைவரும் நன்றாக நடித்துள்ளனர். படம் சூப்பர் ஹிட் என்று தெரியும் இருந்தாலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்