பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தின் பெயர் வெளியீடு

நடிகர் கார்த்தியின் 27-வது படத்தை '96' படத்தை இயக்கி பிரபலமான இயக்குனர் பிரேம் குமார் இயக்குகிறார்.

Update: 2024-05-24 12:15 GMT

Image Courtesy: @Suriya_offl

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் ஜப்பான். இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப்பெறவில்லை. இதையடுத்து தனது அடுத்தடுத்த படங்களை வெற்றிப்படங்களாக கொடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளார்.

இந்நிலையில், நடிகர் கார்த்தியின் 27-வது படத்தை விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான '96' படத்தை இயக்கிய பிரபலமான இயக்குனர் பிரேம் குமார் இயக்குகிறார். இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை சூர்யா - ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அப்படத்தின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு 'மெய்யழகன்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்