தொழில் அதிபரை மணக்கும் பூர்ணா

பூர்ணாவுக்கும், சானித் ஆசிப் அலி என்பவருக்கும் திருமணம் முடிவாகி உள்ளது.;

Update:2022-06-02 14:49 IST

தமிழில் பரத்தின் விலங்கியல் மூன்றாமாண்டு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பூர்ணா. கேரளாவை சேர்ந்த இவர் தொடர்ந்து கொடைக்கானல், கந்தகோட்டை, துரோகி, சவரகத்தி, ஆடுபுலி, வித்தகன், கொடி வீரன், அடங்க மறு, தலைவி, காப்பான் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்வதாக தன்னிடம் பணமோசடியில் ஈடுபட முயன்ற கும்பலை பூர்ணா போலீசில் சிக்க வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது பூர்ணாவுக்கும், சானித் ஆசிப் அலி என்பவருக்கும் திருமணம் முடிவாகி உள்ளது. சானித் ஆசிப் அலி துபாயில் தொழில் அதிபராக இருக்கிறார். தனது வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பூர்ணா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, "குடும்பத்தினரின் ஆசிர்வாதத்தோடு வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு அடியெடுத்து வைக்கிறேன்'' என்று பதிவிட்டுள்ளார். இவர்களுக்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. பூர்ணாவுக்கு வலைத்தளத்தில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

Full View

Tags:    

மேலும் செய்திகள்