கமல்ஹாசனின் 'தக் லைப்' படத்திலிருந்து விலகிய துல்கர் சல்மான்...

'தக் லைப்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Update: 2024-03-05 20:09 GMT

சென்னை,

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் 'தக் லைப்' (Thug Life). இந்த படத்தில் திரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி மற்றும் உட்பட பலர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. 'தக் லைப்' திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தக் லைப் படத்திலிருந்து நடிகர் துல்கர் சல்மான் விலகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவரின் மற்ற படப்பிடிப்பு தேதிகளுடன் தக் லைப் படத்தின் ஷெட்யூல் ஒரே நேரத்தில் வர இருப்பதால் தேதிகள் ஒதுக்க முடியாத காரணத்தால் துல்கர் சல்மான் படத்திலிருந்து விலகிவிட்டார்" என தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்