'கஸ்டடி' படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு

'கஸ்டடி' படத்தில் நீருக்கடியில் எடுக்கப்பட்ட காட்சிகளின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.;

Update:2023-05-11 23:07 IST

சென்னை,

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள 'கஸ்டடி' திரைப்படம் நாளை (மே 12-ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி, அரவிந்த் சாமி, சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். இந்நிலையில், 'கஸ்டடி' படத்தில் நீருக்கடியில் எடுக்கப்பட்ட காட்சிகளின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்