பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியை பாராட்டிய ராஷ்மிகா மந்தனா

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா கண்டுள்ள வளர்ச்சியைப் பாருங்கள் என்று நடிகை ராஷ்மிகா மந்தனா கூறினார்.

Update: 2024-05-17 08:07 GMT

மும்பை,

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தமிழில் வாரிசு, தெலுங்கில் கீத கோவிந்தம், புஷ்பா உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா அண்மையில் தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில், "கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா கண்டுள்ள வளர்ச்சியைப் பாருங்கள். மும்பை - நவி மும்பை நகரங்களை இணைக்கும் வகையில் நாட்டிலேயே மிக நீளமான கடல்வழி பாலமாக அமைக்கப்பட்டுள்ளது 'அடல் சேது' பாலம். இதன் மூலம் இரண்டு மணி நேர பயணம் இருபது நிமிட பயணமாக குறைந்துள்ளது. இதுபோன்ற உள்கட்டமைப்பு வசதிகளால்தான் எளிதில் நம்மால் பயணம் மேற்கொள்ள முடிகிறது. இது எனக்கு பெருமை அளிக்கிறது. பிரதமர் மோடியின் உள்கட்டமைப்பு சார்ந்த திட்டமிடல் அபாரமாக உள்ளது" இவ்வாறு நடிகை ராஷ்மிகா மந்தனா பேசியுள்ளார்

பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியை வாயாற புகழ்ந்த நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார். அதில், கண்டிப்பாக மக்களை இணைப்பதையும் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதையும் விட திருப்திகரமானது எதுவும் இல்லை, என்று கூறி பிரதமர் மோடி ராஷ்மிகாவின் பதிவைப் பகிர்ந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்