டைரக்டர் ஹரி இயக்கத்தில் ஜெயம் ரவி

ஹரி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் ஜெயம் ரவி நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2022-06-10 09:26 GMT

தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி பாணியை அமைத்துக்கொண்டு, சிறந்த படங்களை கொடுத்து வரும் நடிகர், ஜெயம் ரவி. இவருடைய நடிப்பில் தற்போது 'பொன்னியின் செல்வன்', 'ஜனகனமன', 'அகிலன்' ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

அதைத்தொடர்ந்து ஹரி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் ஜெயம் ரவி நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அருண் விஜய் நடிப்பில் ஹரி இயக்கியுள்ள 'யானை' படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து ஹரியின் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்க உள்ளதாக கூறப் படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்