திருப்பதி கோவிலில் மகனை தூக்கி வந்து காஜல் அகர்வால் தரிசனம்

திருப்பதி கோவிலில் மகனை தூக்கி வந்து காஜல் அகர்வால் தரிசனம் செய்தார்.;

Update:2023-02-01 07:27 IST

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால் தனது நீண்ட கால நண்பரான தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை காதலித்து 2020-ல் திருமணம் செய்து கொண்டார். கடந்த வருடம் காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

அந்த குழந்தைக்கு நீல் என்று பெயர் வைத்தனர். குழந்தை பிறந்து 6 மாதம் ஆன நிலையில் மீண்டும் படப்பிடிப்புகளில் காஜல் அகர்வால் பங்கேற்று நடித்து வருகிறார். தமிழில் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்திலும், தெலுங்கில் பாலகிருஷ்ணாவின் 108-வது படத்திலும் நடிக்கிறார். மேலும் சில படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்துள்ளன.

இந்த நிலையில் காஜல் அகர்வால் தனது குழந்தை நீலை தூக்கி கொண்டு திருப்பதி கோவிலுக்கு வந்தார். அங்கு குழந்தையை கையில் வைத்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தார். காஜல் அகர்வாலுக்கு கோவில் அதிகாரிகள் தீர்த்தம் மற்றும் பிரசாதம் வழங்கினார்கள். திருப்பதி கோவிலுக்கு வந்த காஜல் அகர்வாலை காண ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவில் பாதுகாப்பு ஊழியர்கள் காஜல் அகர்வாலை பத்திரமாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்