'சந்து சாம்பியன்' படத்திற்காக 18 கிலோ எடை குறைந்த பாலிவுட் நடிகர்

உலக சாம்பியனை பற்றிய கதை என்பதால் சர்வதேச விளையாட்டு வீரரின் உடற்கட்டு வர கடுமையான உடற்பயிற்சி மூலம் 18 கிலோ எடை குறைந்துள்ளார் பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யன்.

Update: 2024-05-17 11:44 GMT

பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கும் டிரண்ட் இந்திய சினிமாவில் கோலோச்சி வருகிறது. அதிலும் முக்கியமாக விளையாட்டு வீரர்களின் தன்னபிக்கையூட்டும் கதைகள் சினிமா மூலம் சொல்லப்பட்டு வருகிறது. தங்கல், எம்.எஸ் தோனி உள்ளிட்ட படங்கள் அதற்கு சிறந்த எடுக்காட்டாகும். அந்த வகையில் இந்தியாவுக்காக பாராஒலிம்பிக்கில் முதல் முதலில் தங்கப்பதக்கம் வென்ற முரளிகாந்த் பெட்காவின் வாழ்க்கை வரலாறு 'சந்து சாம்பியன்' என்ற பெயரில் பாலிவுட்டில் திரைப்படமாக உருவாகி வருகிறது.

கபீர் கான் இயக்கும் இப்படத்தில் முரளிகாந்த் கதாபாத்திரத்தில் வளர்ந்து வரும் பிரபல பாலிவுட் நடிகர் கர்த்திக் ஆர்யன் நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்திற்காக கார்த்திக் ஆர்யனின் கடின உழைப்பை குறித்து படத்தின் இயக்குனர் கபீர் கான் மனம் திறந்துள்ளார்.

இதுகுறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர், "சந்து சாம்பியன் கதை எந்த அளவுக்கு மக்களுக்கு ஊக்கமளிப்பதோ அதற்க்கு சற்றும் குறையாத வகையில் இந்த படத்துக்காக கார்த்திக் ஆர்யனின் கடின உழைப்பும் ஒருவருக்கு ஊக்கமளிக்கக் கூடியது ஆகும். ஒரு வருடங்களுக்கு முன் நான் கார்த்திக்கிடம், இது ஒரு உலக சாம்பியனை பற்றிய கதை என்பதால் சர்வதேச விளையாட்டு வீரரின் உடற்கட்டு உங்களுக்கு வர வேண்டும் என்று தெரிவித்திருந்தேன், அதற்கு அவர் சிரித்தபடியே சரி என்று கூறினார்.

அதன்படி ஒன்றரை வருட காலத்துக்குள் எந்த விதமான ஸ்டிராய்டுகளும் இல்லாமல் கடுமையான உடற்பயிற்சி மூலம் தனது உடல் கொழுப்பை 32 சதவீதம் வரை குறைத்து 18 கிலோ எடை குறைந்துள்ளார். அவரை நினைத்து பெருமைப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

சந்து சாம்பியன் படம் தொடர்பான கார்த்திக் ஆர்யனின் ட்ரான்ஸ்பர்மேசன் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சந்து சாம்பியன் படத்தின் டிரைலர் நாளை (மே 18) வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்