கமல்ஹாசனின் 'விக்ரம்' திரைப்படத்தை பாராட்டிய மகேஷ் பாபு

ஜூன் 03-ஆம் தேதி வெளியான 'விக்ரம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

Update: 2022-07-02 16:59 GMT

சென்னை,

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் உருவாகி கடந்த ஜூன் 03-ஆம் தேதி வெளியான 'விக்ரம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ளார். ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் அனைவரையும் கவர்ந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் விக்ரம் திரைப்படத்தை பாராட்டியுள்ள தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபு வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ;

''விக்ரம்..ப்ளாக் பஸ்டர் சினிமா! இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உங்களுடன் இணைந்து விக்ரம் படத்தின் ஒட்டுமொத்த செயல்முறை குறித்து விவாதிக்க விரும்புகிறேன். சிறப்பான படைப்பு. விஜய் சேதுபதி மற்றும் ஃபஹத் பாசில் நடிப்பு திரையில் ஒளிர்கிறது.

இதைவிட சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முடியாது. அனிருத் என்ன மாதிரியான ஒரு இசை... உங்களுடைய பெஸ்ட் இது.

இறுதியாக கமல்ஹாசன் அவர்களின் நடிப்பு குறித்து கருத்து சொல்ல எனக்கு போதுமான தகுதியில்லை. நான் . உங்களின் மிகப்பெரிய ரசிகனான எனக்கு, இது பெருமையான தருணங்களில் ஒன்று! வாழ்த்துகள் சார் உங்களுக்கும் உங்கள் அருமையான குழுவிற்கும்!'' என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்