"விஜய் தமிழ் சினிமாவுக்கு தேவை" - மேடையில் உருக்கமாக பேசிய நடிகர் நாசர்
மலேசியாவில் நேற்று ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.;
சென்னை,
நடிகர் விஜய் மீண்டும் நடிக்க வேண்டும் எனவும், அப்படி நடித்தால் யாரும் அவரை குறை சொல்ல மாட்டார்கள் என்றும் நடிகர் நாசர் தெரிவித்துள்ளார்.
மலேசியா கோலாலம்பூரில் நேற்று ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. . இதில், திரையுலகினர் பலர் கலந்துகொண்டனர். அவ்விழாவில் பேசிய நடிகர் நாசர் விஜய்யிடம் ஒரு கோரிக்கை வைத்தார். அவர் பேசுகையில்,
"விஜய் தமிழ் சினிமாவுக்கு தேவை. தயவுசெய்து மீண்டும் நடியுங்கள். நடிப்பு பற்றிய தனது முடிவை விஜய் மாற்றிக்கொள்ள வேண்டும். முடிவை மாற்றினால் யாரும் விஜய்யை விமர்சிக்க மாட்டார்கள். விமர்சனத்தை கடந்துபோகும் பக்குவம் விஜய்யிடம் உள்ளது" என்றார்.
நடிகர் நரேன் பேசுகையில், விஜய்யுடைய கனவுகள் நிறைவேற தனது வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும் நடிகை பிரியாமணி விஜய்யுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை. ஜனநாயகன் படத்தின் மூலம் நிறைவேறியதாக தெரிவித்தார்.