கவுதம் மேனனின் அடுத்த படத்தில் ஹீரோ இவரா?
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் கவுதம் மேனன்.;
சென்னை,
இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் ஒரு படத்திற்காக தெலுங்கு நடிகர் ரோஷனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது நடக்கும் பட்சத்தில், ஸ்வப்னா சினிமா அதை தயாரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது தவிர, ரோஷன், இயக்குனர் சைலேஷ் கொலானுவுடன் ஒரு காதல்-நகைச்சுவை பொழுதுபோக்கு படத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. இந்த திட்டம் நிறைவேறினால், இந்தப் படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் என்று கூறப்படுகிறது.
நடிகர் ரோஷன், சமீபத்தில் திரைக்கு வந்த ‘சாம்பியன்’ படத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் அவரது நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்தன.