’அப்படி ஒரு வேடம் கிடைத்தது எனது அதிர்ஷ்டம்’ - நடிகை அர்ச்சனா
அர்ச்சனா ஐயர் இப்போது 'ஷம்பலா' என்ற திகில் திரில்லரில் நடித்துள்ளார்.;
சென்னை,
ஒருவர் சினிமா வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே நல்ல கதாபாத்திரங்களை பெறுவது அதிர்ஷ்டம். குறிப்பாக கதாநாயகிகளுக்கு. சமீபத்தில், நடிகை அர்ச்சனா ஐயர் இதை பற்றி சுவாரஸ்யமான கருத்துக்களைத் தெரிவித்தார்.
'கிருஷ்ணம்மா' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இவர், இப்போது ஆதி சாய்குமாருடன் 'ஷம்பலா' என்ற திகில் திரில்லரில் நடித்துள்ளார். நேற்று முன்தினம் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில், அர்ச்சனா இப்படத்தில் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
அவர் பேசுகையில், 'இப்படத்தின் கதையை கேட்காமலேயே சரின்னு சொன்னேன். வழக்கமாக, எந்த கதாநாயகியும் முழு கதையையும் கேட்ட பிறகுதான் படத்தில் கையெழுத்திடுவார்கள். ஆனால் 'ஷம்பலா' படத்தின் முழு கதையையும் கேட்காமலேயே சரின்னு சொன்னேன். அதற்குக் காரணம், எனது கதாபாத்திரம். படத்தில் 'தேவி' என்ற பெண்ணாக நடித்துள்ளேன். முழு கதையும் அந்தக் கதாபாத்திரத்தைச் சுற்றியே இருக்கும். அதனால்தான் கதையைக் கூட கேட்கவில்லை’ என்றார்.