கமல்ஹாசனுக்கு மெட்ரோ நிர்வாகம் நோட்டீஸ்

மெட்ரோ ரெயில் நிர்வாகம் சார்பில் கமல்ஹாசனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது

Update: 2022-07-03 16:02 GMT

சென்னை,

சென்னையில் 61 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகிறது.இதில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.இந்த பாதை ஆழ்வார்பேட்டை வழியாக செல்கிறது.இதற்காக அப்பகுதியில் நிலங்களை கையகப்படுத்தும் பணியில் மெட்ரோ ரெயில் நிர்வாக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகளுக்காக ஆழ்வர்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசன் இடத்திற்காக மெட்ரோ ரெயில் நிர்வாகம் சார்பில் கமல்ஹாசனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்