மூன்றாவது பாடலை வெளியிடும் நானியின் 'தசரா' படக்குழு

நானி நடித்துள்ள 'தசரா' படத்தின் 3-வது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Update: 2023-03-03 15:53 GMT

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நானி, 'அடடே சுந்தரா' படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'தசரா' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ள இந்த படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்த நிலையில், இந்த படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'தசரா' திரைப்படத்தின் மூன்றாவது பாடலான 'மைனரு வேட்டிக்கட்டி' என்ற பாடல் வருகிற மார்ச் 8-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்