``அவர்களின் குட்புக்கில் இல்லையென்றால்..’’- தயாரிப்பாளர் தனஞ்செயன் பரபரப்பு கருத்து

ஜனநாயகன், பராசக்தி ஹேஷ்டேக் உடன் தயாரிப்பாளர் தனஞ்செயன் பரபரப்பு கருத்துக்களை தெரிவித்துள்ளார்.;

Update:2026-01-09 18:43 IST

சென்னை,

’ஜனநாயகன்’, ’பராசக்தி’ படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், பராசக்தி படத்தில் 25 இடங்களில் வசனங்களை மியூட் செய்து, காட்சிகளை கட் செய்த பிறகே யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், ஜனநாயகன் படத்திற்கு இன்னும் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை. இன்று இதற்கான வழக்கு விசாரிக்கப்பட்ட நிலையில், வழக்கு 21-ம் தேதிக்கு தள்ளிப்போனது. பொங்கலுக்காவது படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வழக்கு தள்ளிப்போனதால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், ஜனநாயகன், பராசக்தி ஹேஷ்டேக் உடன் தயாரிப்பாளர் தனஞ்செயன் பரபரப்பு கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

“பாலிவுட்டைப் போல குறைந்தது ரிலீஸ் தேதிக்கு 45–60 நாட்களுக்கு முன்பே படத்தை சென்சாருக்கு அனுப்புங்கள். சென்சார் சான்று இல்லாமல் ரிலீஸ் தேதியை அறிவிக்காதீர்கள். இல்லையென்றால் படத்தை ரிலீஸ் செய்யவிடாமல் தடுக்க எந்த அளவிற்கும் செல்லும் சக்திகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இது ஒட்டுமொத்த தென்னிந்திய தயாரிப்பாளர்கள், இயக்குநர்களுக்கு கிளியர் மெசேஜ். மேலிடத்தின் குட்புக்கில் இல்லாதவர்களின் படங்களுக்கு நெருக்கடியான காலம் காத்திருக்கிறது.” என தெரிவித்திருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்