’தி ராஜா சாப்’ படம் பார்க்க முதலையுடன் தியேட்டருக்கு வந்த ரசிகர்கள்...பரபரப்பு சம்பவம்

நேற்று இரவு ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் 'தி ராஜா சாப்' படத்தின் பிரீமியர் காட்சிகள் நடைபெற்றன.;

Update:2026-01-09 21:45 IST

சென்னை,

நடிகர் பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரைக்கு வந்திருக்கும் படம் 'தி ராஜா சாப்'. இப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. அதற்கு முன்னதாக நேற்று இரவு ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் இப்படத்தின் பிரீமியர் காட்சிகள் நடைபெற்றன. அப்போது நடந்த ஒரு வித்தியாசமான சம்பவம், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

படம் பார்க்க வந்த பிரபாஸ் ரசிகர்களில் சிலர், குட்டி முதலையை கையில் எடுத்துக்கொண்டு தியேட்டருக்குள் நுழைந்தனர். இது அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உடனடியாக விசாரிக்கப்பட்ட நிலையில், அவை உண்மையான முதலையல்ல, ரப்பர் மூலம் செய்யப்பட்ட டம்மி முதலையென தெரிய வந்தது.

தி ராஜா சாப்' படத்தின் டிரெய்லரில், பிரபாஸ் முதலையுடன் மோதும் காட்சி இடம்பெற்றிருந்தது. இதனை பார்த்து, ரசிகர்கள் முதலை பொம்மையை எடுத்துக்கொண்டு தியேட்டருக்கு வந்ததாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்