ஆஷிகா ரங்கநாத்தின் ‘பிஎம்டபிள்யூ’...கவனம் ஈர்க்கும் டிரெய்லர்
தற்போது ஆஷிகா , ரவி தேஜாவுக்கு ஜோடியாக ’பாரத மகாசாயுலகு விக்ஞாப்தி’ படத்தில் நடித்துள்ளார்.;
சென்னை,
தெலுங்கு சினிமாவில் தனக்கென ஒரு வலுவான இடத்தை உருவாக்கி வரும் நடிகை ஆஷிகா ரங்கநாத், தொடர்ச்சியாக தனது நடிப்பு மற்றும் கவர்ச்சியால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
தற்போது அவர் ரவி தேஜாவுக்கு ஜோடியாக ’பாரத மகாசாயுலகு விக்ஞாப்தி’ (பிஎம்டபிள்யூ) படத்தில் நடித்துள்ளார். கிஷோர் திருமலா இயக்கும் இப்படம் வருகிற 13-ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்திலிருந்து சமீபத்தில் வெளியான "வாம்மோ வாயோ" என்ற பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது.