எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கை சினிமா படமாகிறது - பிரபல நடிகைகளுடன் பேச்சுவார்த்தை

எம்.எஸ். சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல நடிகைகளான நயன்தாரா, ராஷ்மிகா மந்தனா மற்றும் திரிஷாவிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2024-05-22 11:34 GMT

சென்னை,

1916ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி மதுரையில் பிறந்தவர் எம்.எஸ். சுப்புலட்சுமி. அவர் தனது 10-வது வயதில் எச்.எம்.வி. நிறுவனத்திற்காக பாடி சாதனை படைத்தார். அதனைத்தொடர்ந்து சில படங்களிலும் நடித்தார். அவர் நடித்த முதல் படம் சேவாசதன். அதன் பின்னர் 4 படங்களில் எம்.எஸ். நடித்தார். அதில் அதிகம் பிரபலமடைந்த படம் மீரா.

கர்நாடக இசையின் ராணியாக கோலோச்சி வந்த எம்.எஸ். பெறாத பட்டங்களோ, பரிசுகளோ கிடையாது எனக் கூறும் வகையில் அத்தனை உயர் பரிசுகளையும், பட்டங்களையும் பெற்று விட்டார்.

1954ல் பத்மபூஷன் விருதைப் பெற்றார். மியூசிக் அகாடமி வழங்கும் சங்கீத கலாநிதி பட்டத்தை 1968ல் பெற்றார். இந்த விருதைப் பெற்றமுதல் பெண்மணி எம்.எஸ்.தான். 1998ல் இந்தியாவின் உயரிய விருதான பாரதரத்னா விருதைப் பெற்றார்.

தற்போது, இவரின் வாழ்க்கை வரலாறை சினிமா படமாக்க பெங்களூரு புரோடக்சன் ஹவுஸ் முடிவு செய்துள்ளது. அதன்படி, இப்படத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல நடிகைகளான நயன்தாரா, ராஷ்மிகா மந்தனா மற்றும் திரிஷாவிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்