நடிகர் திலீப் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்த “தங்கலான்” பட நடிகை

திலீப்பிற்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி கோர்ட்டு அவரை விடுதலை செய்தது.;

Update:2025-12-08 18:52 IST

எர்ணாகுளம்,

கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ம் தேதி கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு காரில் வீட்டுக்குச் சென்ற போது, நடிகையை ஒரு கும்பல் கடத்தி ஓடும் காரில் பாலியல் தொல்லை கொடுத்தது. அதனை வீடியோவாக பதிவு செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து கேரள போலீசார் விசாரணை நடத்தி, நடிகர் திலீப்பின் தூண்டுதலின் பேரிலேயே இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில், நடிகையின் கார் ஓட்டுநர், உதவியாளர்களும் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். கடந்த 8 ஆண்டுகளாக இந்த வழக்கின் விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில், நடிகர் திலீப்பிற்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி கோர்ட்டு விடுதலை செய்தது. விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று கேரள நடிகைகள் கூட்டமைப்பு கூறியுள்ளது.

இந்நிலையில், நடிகை பார்வதி திருவொத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இது நீதியா?.. என்றும் அவருடன். அவர் தனக்காக மட்டுமல்ல, கேரளாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்காகவும் போராடினார். அவரது போராட்டம் கேரளாவின் சமூகத்தில் பெண்கள் நிற்கும், போராடும், பேசும், வன்முறைக்கு எதிர்வினையாற்றும் விதத்தை மாற்றியது. நீதி என்றால் என்ன? இப்போது நாம் மிகவும் கொடூரமான மற்றும் கவனமான வடிவமைக்கப்பட்ட ஒரு கதையின் முடிவைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் ” என பார்வதி வேதனை தெரிவித்துள்ளார்.


‘பூ', ‘மரியான்', ‘சென்னையில் ஒருநாள்', ‘தங்கலான்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பார்வதி திருவோத்து. இவர், மலையாளத்திலும் ஏராளமான படங்கள் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து திலீப் விடுதலை செய்யப்பட்டதற்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்