ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் படத்தின் புதிய அப்டேட்..!

இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி 'ஏழு கடல் ஏழு மலை' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Update: 2022-11-09 16:11 GMT

சென்னை,

இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி 'ஏழு கடல் ஏழு மலை' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடிக்கிறார்.

வி ஹவுஸ் புரொடக்‌சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். என்.கே. ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் 'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படத்தின் படக்குழு நடிகை அஞ்சலியின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை நடிகர் நிவின் பாலி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அஞ்சலி வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்