பணத்தை திருப்பி தர மறுப்பதாக நடிகர் சாயாஜி ஷிண்டே மீது போலீசில் புகார்

நடிகர் சாயாஜி ஷிண்டே மீது டைரக்டர் சச்சின் என்பவர் மும்பை போலீசிலும், மராத்தி திரைப்பட கழகத்திலும் புகார் அளித்துள்ளார்.

Update: 2022-12-09 02:23 GMT

தமிழில் 'பூவெல்லாம் உன் வாசம்', 'அழகி', 'பாபா', 'வேலாயுதம்', 'அழகிய தமிழ் மகன்', 'வேட்டைக்காரன்', 'சந்தோஷ் சுப்பிரமணியம்' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் சாயாஜி ஷிண்டே. தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள படங்களிலும் வில்லன், நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் சாயாஜி ஷிண்டே மீது டைரக்டர் சச்சின் என்பவர் மும்பை போலீசிலும், மராத்தி திரைப்பட கழகத்திலும் புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகார் மனுவில், ''எனது திரைப்படத்தில் நடிக்க சாயாஜி ஷிண்டேவை ஒப்பந்தம் செய்தேன். இதற்காக அவருக்கு சம்பளம் பேசி ரூ.5 லட்சம் கொடுத்தேன். ஆனால் படப்பிடிப்பை தொடங்கிய நேரத்தில் படத்தின் கதையை மாற்றும்படி கூறினார். நான் மறுத்ததும் படத்தில் நடிக்க மறுத்து வெளியேறி விட்டார். இதனால் ரூ.17 லட்சம் இழப்பு ஏற்பட்டது. நாங்கள் கொடுத்த ரூ.5 லட்சத்தையும் திருப்பிதரவில்லை. எனவே சாயாஜி ஷிண்டே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்