பொன்னியின் செல்வன் 2 படத்தின் புதிய பாடல் வெளியீடு
'பொன்னியின் செல்வன் -2' படத்தின் அடுத்த பாடலான 'வீரா ராஜ வீர' பாடலின் லிரிக் வீடியோ இன்று வெளியாகியுள்ளது.;
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன்-1. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சில விருதுகளையும் குவித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் அடுத்த பாடல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'பொன்னியின் செல்வன் -2' படத்தின் அடுத்த பாடலான 'வீரா ராஜ வீர' பாடலின் லிரிக் வீடியோ இன்று வெளியாகியுள்ளது.
Get mesmerized by the scintillating #VeeraRajaVeera, all set to rule your hearts and playlists!
— Lyca Productions (@LycaProductions) April 8, 2023
▶️ https://t.co/SJQetfS2tq#PS2 in cinemas worldwide from 28th April in Tamil, Hindi, Telugu, Malayalam, and Kannada!#CholasAreBack #PonniyinSelvan2 #ManiRatnam @arrahman… pic.twitter.com/32jIBn7EVh