'ஹிட் லிஸ்ட்' படத்தின் டிரைலரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்

'ஹிட் லிஸ்ட்' படத்தின் டிரைலரை சிவகார்த்திகேயன் அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

Update: 2024-05-17 13:32 GMT

சென்னை,

இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நாயகனாக அறிமுகமாகும் புதிய படம் "ஹிட் லிஸ்ட்". கே.எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தை சூர்ய கதிர் இயக்குகிறார். இந்த படத்தில் சரத்குமார், சித்தாரா, கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திர கனி, முனிஸ்காந்த், ஸ்மிருதி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். டிரைலர் காட்சிகள் மிகவும் விறுவிறுப்பாக அமைந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்