ஜப்பான் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது

'ஜப்பான்' திரைப்படம் நாளை (நவம்பர் 10) திரையரங்குகளில் வெளியாகிறது

Update: 2023-11-09 13:27 GMT

சென்னை,

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஜப்பான்'. இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

'ஜப்பான்' திரைப்படம் நாளை (நவம்பர் 10) திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்