'லியோ' படத்தின் தெலுங்கு பதிப்பை வெளியிட தடை..!

‘லியோ’ படத்தின் தெலுங்கு பதிப்பை வரும் 20-ந்தேதி வரை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-10-17 10:21 GMT

ஐதராபாத்,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம் வரும் 19-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழகத்தில் 'லியோ' படத்தின் முதல் காட்சியை காலை 9 மணிக்கு திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே 'லியோ' என்ற பெயரை அதன் தெலுங்கு பதிப்பிற்கு பயன்படுத்த தடை விதிக்கக்கோரி சித்தாரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் ஐதராபாத் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், லியோ படத்தின் தெலுங்கு பதிப்பை வரும் 20-ந்தேதி வரை வெளியிடுவதற்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்