மம்முட்டி நடித்துள்ள 'பிரம்மயுகம்' படத்தின் டீசர் வெளியானது..!
சமீபத்தில் 'பிரம்மயுகம்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது.;
சென்னை,
ராகுல் சதாசிவன் இயக்கத்தில் மம்முட்டி நடித்துள்ள திரைப்படம் 'பிரம்மயுகம்'. இந்த படம் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன், அமல்டாலிஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராமச்சந்திர சக்கரவர்த்தி மற்றும் எஸ்.சஷிகாந்த் ஆகியோர் தயாரித்துள்ள இந்த படத்துக்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் 'பிரம்மயுகம்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் மலையாள டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.