சசிகுமார், சரத்குமார் நடிக்கும் 'நா நா' படத்தின் டிரைலர் வெளியானது..!

சசிகுமார், சரத்குமார் இணைந்து நடித்துள்ள 'நா நா' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

Update: 2023-08-11 17:48 GMT

சென்னை,

'சலீம்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான நிர்மல் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'நா நா'. இந்த படத்தில் சசிகுமார் மற்றும் சரத்குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சித்ரா சுக்லா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, டெல்லி கணேஷ், பிரதீப் ராவத், ரமா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே ராம் மோகன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஹர்ஷவர்த்தன் இசையமைத்துள்ளார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.Full View

Tags:    

மேலும் செய்திகள்