வெங்கட் பிரபுவின் டுவிட்டர் பதிவு... அடுத்த படம் குறித்து நாளை அப்டேட்!
வெங்கட் பிரபு வெளியிட்ட பதிவு டுவிட்டரில் வைரலாகி வருகிறது.
சென்னை,
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றதாக படக்குழு அறிவித்தது. இந்த படத்தை தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், புதிய படத்தின் அறிவிப்பு நாளை(30-ந்தேதி) காலை 11 மணிக்கு வெளியாகும் என பதிவிட்டுள்ளார். இது 'தளபதி 68' குறித்த அறிவிப்பாக இருக்குமா? என ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர்.