ஆக்‌ஷனை விட்டு காமெடிக்கு திரும்பும் நடிகர் சந்தானம்

சந்தானம் நடித்த 'குலு குலு' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இவர் தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.;

Update:2022-08-18 23:41 IST

இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருந்த திரைப்படம் 'குலு குலு'. இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அதுல்யா சந்திரா மற்றும் நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் ஜூலை 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில், சந்தானம் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த கோவர்தன் அண்மையில் நடிகர் சந்தானத்தை சந்தித்து கதை கூறியுள்ளார். காமெடி, ஃபான்டஸி கலந்த இப்படத்தின் கதை அவருக்கு பிடித்திருந்ததால் இப்படத்தில் நடிக்க சந்தானம் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த படத்தில் சந்தானம் 5 கெட்டப்களில் நடிக்க இருப்பதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்