காதல் வதந்திக்கு பிகில் நடிகை விளக்கம்

வர்ஷா பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவரின் மகனுடன் காதலில் இருக்கிறார், விரைவில் திருமணமும் நடைபெற இருக்கிறது என தெலுங்கு மீடியாக்களில் செய்தி வெளியாகி இருக்கிறது. அது முற்றிலும் பொய்யான செய்தி என வர்ஷா பொல்லம்மா விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.;

Update:2022-10-31 15:44 IST

தமிழில் சசிகுமாரின் வெற்றிவேல் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் வர்ஷா பொல்லம்மா. விஜய்யுடன் பிகில் மற்றும் விஜய் சேதுபதியின் 96 ஆகிய படங்களில் நடித்தும் பிரபலமானார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் ஒருவரின் மகனை வர்ஷா காதலிப்பதாகவும், அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தெலுங்கு இணையதளங்களில் தகவல் பரவியது. இதற்கு வர்ஷா பொல்லம்மா விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ''எனது திருமணம் குறித்து வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது. நான் திருமணம் செய்து கொள்ள இருக்கும் அந்த மாப்பிள்ளை யார் என்பதை சொல்லுங்கள். அப்போதுதான் அவரை பற்றி எனது குடும்பத்தினரிடம் நான் சொல்ல முடியும். உண்மையற்ற தகவல்களை பரப்ப வேண்டாம். எனக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்