சாதாரண வாழ்க்கையை கூட போராடி தான் வாழவேண்டும்.. இணையத்தை ஆக்கிரமிக்கும் 'ரத்தம்' பட டீசர்..

இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரத்தம்’. இதில் கதாநாயகனாக விஜய் ஆண்டனி நடித்துள்ளார்.;

Update:2022-12-07 22:04 IST

நடிகர் சிவா நடிப்பில் வெளியான 'தமிழ்படம்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சி.எஸ்.அமுதன். மேலும் மின்னலே, அனேகன் உள்ளிட்ட திரைப்படங்களில் பாடல்களும் எழுதியுள்ளார். இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் படத்திற்கு 'ரத்தம்' என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. வெற்றிமாறன், பா.இரஞ்சித், வெங்கட் பிரபு ஆகிய 3 பேரும் சிறப்பு தோற்றத்தில் இடம் பெற்றுள்ள இந்த டீசர் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்