தூண்டில் : ‘வரிசி’ சினிமா விமர்சனம்

‘வரிசி’ என்றால் தூண்டில் என்று அர்த்தமாம். இந்த படத்தின் கதைப்படி, காதல் தூண்டில் அல்லது கொலைகாரன் பெண்களுக்கு வீசும் தூண்டில் என்று எடுத்துக்கொள்ளலாம்.

Update: 2021-12-24 12:46 GMT
நகரில் இளம்பெண்கள் அடுத்தடுத்து கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். குறிப்பாக ஐ.டி.யில் பணிபுரியும் பெண்கள் வரிசையாக காணாமல் போகிறார்கள். கொலையாளியை பிடிக்க முடியாமல் போலீஸ் திணறுகிறது.

இதனால் துப்பறிந்து கண்டுபிடிக்கும் பணி போலீசிடம் இருந்து சி.பி.ஐ.க்கு போகிறது. கொலைகாரனை பற்றிய தேடுதல் வேட்டையில் கதாநாயகனும், அவனுடைய நண்பர்களும் ஈடுபடுகிறார்கள். இந்த நிலையில், கதாநாயகி சப்னாதாஸ் கடத்தப்படுகிறார்.

அவர் என்ன ஆகிறார், கடத்தல் மற்றும் கொலைகாரன் யார், சி.பி.ஐ. விசாரணை என்ன ஆனது? என்ற கேள்விகளுக்கு பதில் மீதி படத்தில் இருக்கிறது.

அனுபமா குமார் மற்றும் அவருடைய வளர்ப்பு பிள்ளைகள் சகிதம், எதிர்பார்ப்புகளுடன் படம் ஆரம்பிக்கிறது. கதாநாயகன், அவருடைய நண்பர்கள் கலாட்டாக்களுடன் கதை நகர்கிறது. கதாநாயகி சப்னாதாஸ் ஐ.டி.யில் பணிபுரிவதாக காட்டப்பட்டதும் அடுத்து கடத்தப்படுபவர் இவர்தான் என்று யூகிக்க முடிகிறது. சிரிப்பு நடிகை மதுமிதாவும், அவருடைய நகைச்சுவையும் வீண். அதேபோல் சி.பி.ஐ. விசாரணையும் ‘வேஸ்ட்.’

கொலையாளியை பிடிக்க கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது சிறப்புதான். அது தொடர்பான காட்சிகள் மந்தமாக நகர்வதை அப்படத்தின் கதாநாயகனும் இயக்குனருமான கார்த்திக் தாஸ் கண்டுபிடித்து, திரைக்கதையின் வேகத்தை கூட்டியிருக்கலாம்.

மேலும் செய்திகள்