உலக சேமிப்பு தினம்

அத்தியாவசிய தேவைகளைத் தாண்டி பணத்தை சேமித்து வைப்பது, எதிர்கால பயன்பாட்டுக்கு பக்கபலமாக இருக்கும். சேமிப்பு மற்றும் சிக்கனத்தின் அவசியத்தை மக்களுக்கு உணர்த்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30-ந் தேதி ‘உலக சேமிப்பு தினம்’ கொண்டாடப்படுகிறது.

Update: 2021-10-25 04:30 GMT
சேமிப்பு இல்லாத வாழ்க்கை, கூரை இல்லாத வீட்டுக்கு சமம். சேமிப்பின் அவசியத்தை கொரோனா பரவலின் காரணமாக ஏற்பட்ட, பொது முடக்கத்தின்போது அனைவரும் அறிந்து கொண்டோம். தற்போது சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு பலருக்கு ஏற்பட்டிருப்பது மகிழ்ச்சியான விஷயமாகும். 

அத்தியாவசிய தேவைகளைத் தாண்டி பணத்தை சேமித்து வைப்பது, எதிர்கால பயன்பாட்டுக்கு பக்கபலமாக இருக்கும். சேமிப்பு மற்றும் சிக்கனத்தின் அவசியத்தை மக்களுக்கு உணர்த்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30-ந் தேதி ‘உலக சேமிப்பு தினம்’ கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொருவரும் தங்கள் வருமானத்தை பெற்றஉடன், செய்யும் முதல் செலவு சேமிப்பாக இருக்க வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். வருமானத்தில் குறைந்தது 10 சதவீதத்தையாவது கட்டாயம் சேமிக்க வேண்டும். 


சிறிய அளவிலான சேமிப்பு கூட எதிர்பாராமல் ஏற்படும் அவசரத் தேவைகளின்போது கைகொடுக்கும். குடும்பத்தில் உள்ள அனைவரும் சேமிப்பில் ஈடுபட வேண்டும். வரவு செலவுகளை திட்டமிட்டு சிக்கனமாக செயல்படும்போது, அதிகமாக சேமிக்க முடியும்.

குழந்தைகளுக்கு சேமிப்பின் அவசியத்தை பெற்றோர் சொல்லிக் கொடுக்க வேண்டும். உண்டியலில் பணத்தை சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி, தங்களுக்கு கிடைக்கும் சிறு சிறு தொகையை அதில் சேர்த்து வைப்பதை ஊக்குவிக்க வேண்டும். 

சிக்கனமும், சேமிப்பும் பொருளாதார சமநிலையின் அடிப்படைக் கூறுகள் ஆகும். சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்வதால் மட்டுமே, பொருளாதார ரீதியில் பாதுகாப்பான வாழ்க்கையை வாழ முடியும். 

மேலும் செய்திகள்