விதவிதமான தலையணைகள்!

சந்தையில் இருக்கும் விதவிதமான தலையணைகளை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளோம்.

Update: 2021-11-08 05:30 GMT
ன்றாட வாழ்வில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை தலையணையுடன் செலவழிக்கிறோம். அத்தகைய தலையணைகள் நமக்கு வசதியானதாகவும், பயன்படுத்த எளிதானதாகவும், சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும். விதவிதமான தலையணைகளின் தொகுப்பு இதோ..

கிங் தலையணை (20x36 அங்குலம்) - தினசரி படுக்கையில் பயன்படுத்தும் வகை.

வட்ட வடிவ தலையணை - கார், சோபா, படுக்கை அறை என அனைத்து இடங்களிலும் நமது வசதிக்கேற்ப பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஸ்டாண்டர்ட் தலையணை (20x26 அங்குலம்)
- வீடு, தங்குமிடம் என அனைத்து வகையான இடங்களிலும் பயன்படுத்தப்படும் பொதுவான வகை.

குயின் தலையணை (20x30 அங்குலம்) - இந்த வகை தலையணையை அன்றாடம் பயன்படுத்தலாம்.

‘யூ’ வடிவ தலையணை - பயண நேரத்தில் பயன்படுத்த ஏதுவாக இருக்கும்.

சதுர வடிவ தலையணை- பெரும்பாலும் அலங்காரத்துக்காகப் பயன்படுத்தப்படும்.

ஆர்த்தோபீடிக் தலையணை - கழுத்து, முதுகு மற்றும் மூட்டு சார்ந்த பிரச்சினை இருப்பவர்கள் இந்த வகை தலையணையைப் பயன்படுத்தலாம்.

லும்பர் தலையணை - சோபா போன்ற பர்னிச்சர் பொருட்களில் பயன்படுத்தக்கூடிய வகை.

நெக் ரோல் - பழமையான சோபா மற்றும் படுக்கை அறைகளில் பயன்படுத்தப்படும் தலையணை வகை இது.

மேலும் செய்திகள்