மச்சி..அவுத்து விட்றா காளைகளை! அடிச்சு விரட்ரா கோழைகளை! நடிகர் விவேக் பாராட்டு

உறுமும் சிங்கம் எழுந்துவிட்டது! உணர்ச்சித் தீ கொழுந்து விட்டது! மச்சி...அவுத்து விட்றா காளைகளை! அடிச்சு விரட்ரா கோழைகளை! என போராட்டம் நடத்தும் இளைஞர்களை நடிகர் விவேக் பாராட்டி உள்ளார்.

Update: 2017-01-19 10:08 GMT
தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு  ஆதரவு போராட்டத்துக்கு ரஜினி, கமல், விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர் கள் ஆதரவு  தெரிவித்துள் ளனர்.
மெரினாவில்  கடந்த 3 நாட்களாக  நடைபெறும் போராட்டத்தில்  திரையுலக பிரமுகர்களும்  கலந்து கொண்டு வருகிறார்கள். நேற்று நடிகர்கள் ராகவா லாரன்ஸ், மன்சூர் அலி கான் ஆகியோர் வந்திருந்தனர். இன்றும் அவர்கள் போராட் டத்தில் பங்கேற்றனர்.

இந்த நிலையில் நடிகர் கார்த்தி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு  தெரிவிக்கும் வகையில்  மெரினாவில் நடக்கும் போராட்டத்தில் இன்று பங்கேற்றார்.  நடிகர் உதயா, டைரக்டர் கவுதமன் ஆகியோரும்  ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.நடிகர் கார்த்தி  வந்த போது   போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் சிலர் கை தட்டியும்,  கூச்சலிட்டும் ஆரவாரம்  செய்தனர். இதற்கு  போராட்டத்தில் ஈடுபட்ட மற்ற இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டத்தில்  கலந்து கொள்ள வருவது யாராக இருந்தாலும் சரி இது போன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள் என்று கேட்டுக் கொண்டனர். அதன் பின்னரே   அங்கு அமைதி நிலவியது.

இதைத் தொடர்ந்து நடிகர்கள் கார்த்தியும், உதயாவும் கூட்டத்துக்கு மத்தியில் போய் தரையில்  அமர்ந்து கொண்டனர்.

ஜல்லிக்கட்டுக்காக போராடி வரும் இளைஞர்களை நடிகர் விவேக் வெகுவாக பாராட்டியுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து விவேக் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் இதுவரை ஒரு அலங்காநல்லூர் ! ஆனால் இன்று தமிழ்நாடே ஒரு "அடங்கா நல்லூர்" save jallikattu support jallikattu

ஜல்லிக்கட்டு வெற்றிப்படிக்கட்டை நெருங்கி விட்டது.நேற்று அதை மெரினாவில் நேரில் கண்டேன்.அடுத்து நம் இலக்கு விவசாயிகள்!

இங்கிருந்து 💯இளைஞர்களைக் கொடுங்கள்.இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன்-விவேகானந்தர் அன்று மெரினாவில் சொன்னார்!இன்று அது நடக்கிறது பன்மடங்காய்!

உறுமும் சிங்கம் எழுந்துவிட்டது! உணர்ச்சித் தீ கொழுந்து விட்டது! மச்சி...அவுத்து விட்றா காளைகளை! அடிச்சு விரட்ரா கோழைகளை!

இந்த அறப்போராட்டத்தில் எல்லா இன,மொழி, மத அமைப்பு இளைஞர்களும் இணைந்துவிட்டனர்.இது இப்படியே தொடர்ந்தால் காளையும் நமதே!நாளையும் நமதே!


மேலும் செய்திகள்