விலங்குகளை காப்பதற்கான விழிப்புணர்வை உருவாக்க விரும்புகிறேன்: நடிகை எமி ஜாக்சன்

விலங்குகளை காப்பதற்கான விழிப்புணர்வை உருவாக்க விரும்புகிறேன் என நடிகை எமி ஜாக்சன் கூறியுள்ளார்.

Update: 2017-02-25 15:15 GMT
மும்பை,

தமிழில் மதராசப்பட்டினம் படம் வழியே நடித்து ரசிகர்களை ஈர்த்தவர் நடிகை எமி ஜாக்சன்.  இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவரான அவர் விக்ரமுடன் தாண்டவம் மற்றும் ஐ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.  அதனுடன் தங்க மகன், தெறி போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.  நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷய் குமார் நடிக்கும் எந்திரன் 2.0 படத்திலும் அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் பேசும்பொழுது, விலங்குகள் தங்களுக்காக பேச முடியாது என்பதே உண்மையில் என்னை பாதிக்க வைத்தது.  அவைகளிடம் நாம் அதிக பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது.  அதற்கான விழிப்புணர்வை மக்களிடையே நாம் உருவாக்கிட வேண்டியது அவசியம்.

விலங்குகளின் நலனிற்காக நிதி திரட்டுவதற்கான ஒரு முயற்சி இது.  அவற்றிற்காக என்னால் முடிந்த சிறிய விசயத்தினை நான் மேற்கொள்கிறேன் என கூறியுள்ளார்.  தேவைப்பட்டால் நிதியை திரட்டுவதற்காக இதனை முன்னெடுத்து செல்லும் பணியையும் நான் மேற்கொள்வேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

இங்கிலாந்தின் லண்டன் நகரில் தனது பள்ளி படிப்பை படித்துள்ள எமி, விலங்குகளின் முக்கியத்துவம் பற்றி அந்த பள்ளியின் மாணவர்களை சந்தித்து பேசும் வகையில் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யும்படி பள்ளி நிர்வாகத்திடம் வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்