மதுரை ஐகோர்ட்டில் நடிகர் தனுஷ் ஆஜர் அங்க அடையாளங்களை பரிசோதிக்க நீதிபதி உத்தரவு

மகன் என உரிமை கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்காக நடிகர் தனுஷ் இன்று மதுரை ஐகோர்ட்டில் ஆஜரானார்.

Update: 2017-02-28 06:23 GMT
மதுரை

மதுரை மேலூரைச் சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதியினர், நடிகர் தனுஷ் எங்களுடைய மகன், எங்களுக்கு வயதாகி விட்டதால் பராமரிப்பு தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கு பொய்யானது. அதனை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கிளையில் நடிகர் தனுஷ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது-. இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே இரு தரப்பினரிடமும் உள்ள நடிகர் தனுசின் பள்ளி மாற்று சான்றிதழ்களை தாக்கல் செய்யுமாறு மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டு இருந்தது.- அதன்படி இருதரப்பினரும்  சான்றி தழ்களை தாக்கல் செய்தனர்.

நடிகர் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சான்றிதழ்களில் அங்க மச்சம் அடையாளம் குறிப்பிடவில்லை என எதிர்தரப்பினர் வாதிட்டனர்.

இந்த வழக்கு மதுரை ஐகோர்ட்டு கிளையில்  கடந்த 24-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் தனுசின் அங்கமச்ச அடையாளம் காண இன்று (28-ந்தேதி) ஆஜராகுமாறு நடிகர் தனுசுக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி இன்று காலை 9.45 மணி அளவில் நடிகர் தனுஷ் தனது  வக்கீல்களுடன் மதுரை   ஐகோர்ட்டு கிளைக்கு வந்தார்.   வழக்கு விசாரணைக்கு வரும்வரை அவர் அங்குள்ள அலு வலகத்தில் காத்திருந்தார். தனுசின் பெற்றோரான கஸ்தூரி ராஜா, விஜயலட்சுமி ஆகியோரும் ஐகோர்ட்டுக்கு வந்திருந்தனர். முன்னதாக நடிகர் தனுஷ் கோர்ட்டில் ஆஜராவதை யட்டி அவரது ரசிகர்கள் கோர்ட்டு முன்பு திரண்டிருந்ததால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

தற்போது, வழக்குத் தொடர்ந்த மேலூர் தம்பதியினர் கூறியபடி, தனுஷுக்கு அங்க ஆடையாளங்கள் சரிபார்ப்பு, தனி அறையில் நடந்தது.இந்த வழக்கை மார்ச் 2-க்கு ஒத்திவைத்தது உயர் நீதிமன்ற மதுரை கிளை.

மேலும் செய்திகள்