இந்தியப் படங்களில் அதிகம் தடை செய்யப்பட்ட படங்களில் தமிழ்ப் படங்களுக்கு 2-வது இடம்

இந்தியப் படங்களில் மத்திய திரைப்பட தணிக்கைக் குழுவால் தடை செய்யப்பட்ட படங்களில் தமிழ்ப் படங்களுக்கு 2-வது இடம்.

Update: 2019-02-20 11:52 GMT
16 ஆண்டுகளில் மட்டும் 793 திரைப்படங்களை மத்திய திரைப்பட தணிக்கைக் குழு தடைசெய்துள்ளதாக ஆர்டிஐயில் தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நுதன் தக்கூர் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 2000 முதல் 2016ஆம் ஆண்டு வரையில் மொத்தம் 793 படங்கள் தணிக்கைத் துறையால் இதுவரை தடை செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 207 திரைப்படங்கள் வெளிநாட்டு படங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

தடை செய்யப்பட்ட இந்தியப் படங்களில் இந்திப்படங்கள் முதலிடத்திலும், தமிழ்ப் படங்கள் இரண்டாவது இடத்திலும் உள்ளன. இந்தப் பட்டியலில் மொத்தம் 96 தமிழ்ப்படங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. தெலுங்குப் படங்கள் 56, கன்னடப்படம் 36, மலையாளம் 23, பஞ்சாபி 17, தடைசெய்யப்பட்டு உள்ளன.

மேலும் செய்திகள்