7 ஆயிரம் திரையரங்குகளில் தர்பார் திரைப்படம் வெளியானது ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்

7 ஆயிரம் திரையரங்குகளில் தர்பார் திரைப்படம் வெளியானது ரசிகர்கள் இதனை ஒரு விழாவாக உற்சாக கொண்டாடினர்.

Update: 2020-01-09 06:23 GMT
சென்னை

இசையமைத்ததில், சங்கத்து ஆட்களை பயன்படுத்தாதது, பணம் கொடுக்கவில்லை என மலேசியாவின் டிஎம்ஒய் வழக்கு உள்ளிட்ட பிரச்சினைகளால், தர்பார் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி வசூலிக்க கூறுவதாக திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் புகார் கூறப்பட்டதாக தகவல் எழுந்தது. இதனால், பல்வேறு இடங்களில் படம் விற்பனையாகவில்லை என்றும், வெளியாவதில் சிக்கல் எழும் என்றும் கூறப்பட்டது. எனினும், தர்பார் படம் 9ஆம் தேதி வெளியாகும் என கூறிய நிலையில், சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசிடம் அனுமதி கோரப்பட்டது. 

இதைத் தொடர்ந்து, ஜனவரி 9,10,13,14 ஆகிய 4 தேதிகளில் மட்டும் சிறப்புக் காட்சிக்கு மட்டும் தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதனால், ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 

தர்பார் திரைப்படம் 7 ஆயிரம் திரையரங்குகளில் படம் இன்று வெளியானது. நள்ளிரவு முதலே திரையரங்குகள் முன்பாக திரளான ரசிகர்கள் காத்திருந்தனர்.

படம் திரையிடப்பட்டதும் பட்டாசுகளை வெடித்தும், நடனமாடியும் ரசிகர்கள் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தனர்.

தர்பார் படத்தைப் பார்ப்பதற்காகவே ஜப்பானில் இருந்து வந்திருப்பதாக கூறிய ரஜினி ரசிகர் ஒருவர், ரஜினியின் பஞ்ச் டயலாக்குகளை பேசி அசத்தினார்.

தர்பார் படம் வெளியான இந்தநாள் தான், தங்களுக்கு பொங்கல் பண்டிகை என ரசிகர்கள் உற்சாகத்துடன் தெரிவித்தனர்.

சென்னை தர்பார் படம் வெளியான திரையரங்கில் பிரமாண்டமான பலூன் பறக்கவிடப்பட்டிருந்தது. படத்தைப் பார்ப்பதற்காக ரஜினி குடும்பத்தினர், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

நெல்லையில் தர்பார் படத்தை வரவேற்கும் விதமாகவும் படம் வெற்றியடையவும் பெண்கள் பானையில் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரஜினி ரசிகர்கள் தியேட்டர்கள் முன் விடிய விடியக் காத்திருந்தனர். படம் வெளியானதும் டிரம்செட் வாசித்தும், பொங்கலிட்டும், பட்டாசுகளை வெடித்தும் ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரஜினியின் தர்பார் படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கில், தர்பார் படத்தின் சிறப்பு காட்சியை, ரசிகர்களுடன் சேர்ந்து லதா ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் பார்த்தனர். அவர்களுடன் ராகவா லாரன்சும் உடனிருந்தார். சிறப்பு காட்சியை காண அதிகாலையிலேயே, திரையரங்க வளாகத்தில் குவிந்த ரசிகர்கள், பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆட்டம் பாட்டம் என, திருவிழாக் கோலம் பூண்டது.

மதுரையில் ரஜினி ரசிகர்கள், தர்பார் படத்தின் ரிலீசை கொண்டாடினர். அதிகாலையிலேயே சிறப்பு காட்சியை காணத் திரண்ட ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், மேல தாளம் முழங்க தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்’’

தர்பார் பட வெளியீட்டை முன்னிட்டு திரையரங்கம் முன்பு கிடா வெட்டியும், வெடி வெடித்தும் திருவிழா போல் ரஜினி ரசிகர்கள் கொண்டாடினர். அதிகாலையிலேயே குவிந்த ரசிகர்கள், திரையங்கத்தை கட்சிக் கொடிகளால் அலங்கரித்து கொண்டாடினர்.

சேலம் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் 200க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்களுக்கு இலவச தலைக்கவசம் வழங்கப்பட்டது. இதனிடையே ரஜினியின் தீவிர ரசிகர் ஒருவர் தர்பார் திரைப்படத்தில் ரஜினி காவல்துறை உடை அணிந்து வருவதுபோல காவல்துறை உடையணிந்து ரசிகர்கள் மத்தியில் ஆடிப்பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். 

திண்டுக்கல் நகர் பகுதியில் தர்பார் படம் வெளியாகாத‌தால் ரஜினி ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். யேட்டரில் பேனர்களை கிழித்து ரகளையில் ஈடுபட்ட‌தால் பர‌பரப்பு ஏற்பட்டது. போலீசார் லேசான தடியடி நடத்தி ரசிகர்களை கலைத்தனர்.

மேலும் செய்திகள்