உடல்நலம் பாதிப்பு; நெருங்கிய மரணம்: அழுதபடி பேசிய பாகுபலி நடிகர் ராணா

உடல்நல பாதிப்பினால் 30 சதவீதம் மரண நிலைக்கு தள்ளப்பட்டேன் என பாகுபலி நடிகர் ராணா டகுபதி அழுதது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Update: 2020-11-23 14:46 GMT
ஐதராபாத்,

பாகுபலி படத்தில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த ராணா டகுபதி கொரோனா தொற்று பரவிய இந்த ஆண்டின் ஆகஸ்டில் ஊரடங்கிற்கு இடையே தனது நீண்ட நாள் காதலியான மிஹீகா பஜாஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

சமீபத்தில், புகைப்படம் ஒன்றை அவர் சமூக ஊடகத்தில் பகிர்ந்து கொண்டார்.  அதில் மிக ஒல்லியாக அவர் காணப்பட்டார்.  இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து, ராணாவின் உடல்நலம் பற்றி கேட்க தொடங்கினர்.

சமீப காலங்களாக அவரது உடல்நலம் பற்றி பல வதந்திகளும் பரவி வந்தன.  எனினும், அவர் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், என்னை பற்றி பல புரளிகள் பரவி விட்டன.  அவற்றுக்கு விளக்கம் அளித்து சோர்ந்து விட்டேன்.  நான் நல்ல உடல்நலமுடன் உள்ளேன் என கூறினார்.

ஆனால், நடிகை சமந்தா நடத்தும் சாம் ஜாம் என்ற சாட் நிகழ்ச்சியில் ராணா கலந்து கொண்டார்.  அதில் தனது கடந்த கால உடல்நல குறைவு பற்றி வெளிப்படையாக அவர் பகிர்ந்து கொண்டார்.  அவர் பேசும்பொழுது அழுதபடி காணப்பட்டார்.  அவர் கூறும்பொழுது, தனது இருதயத்தின் சுற்றியுள்ள பகுதியில் கால்சியம் அதிகளவில் படர்ந்து உள்ளது என்றும், சிறுநீரகங்கள் செயலிழந்து போய் விட்டன என்றும் கூறினார்.

இதனால், ஸ்டிரோக் அல்லது ஹெமரேஜ் (ரத்த இழப்பு) ஏற்பட கூடிய வாய்ப்பு உள்ளது என்றும் நேரடியாக மரணம் ஏற்பட கூடிய வாய்ப்பு 30 சதவீதம் உள்ளது என்றும் தனக்கு கூறப்பட்டது என்று கூறினார்.

இதனை தொடர்ந்து நடிகை சமந்தா கூறும்பொழுது, மக்கள் உங்களை சுற்றியுள்ளனர்.  நீங்கள் ஒரு கடின பாறை போன்றவர்.  அதனை நான் எனது கண்களால் காண்கிறேன்.  அதனாலேயே நீங்கள் எனக்கு சூப்பர் ஹீரோவாக இருக்கிறீர்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்