மும்பை டெஸ்ட்: நியூசிலாந்து அணி திணறல்

மும்பை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து அணி வீரர்கள் திணறி வருகின்றனர்.

Update: 2021-12-04 09:59 GMT
மும்பை,

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் மும்பையில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 120 ரன்களுடனும், சஹா 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் போட்டியின் 2-ம் நாளான இன்றைய ஆட்டத்தில் மயங்க் அகர்வால் - பட்டேல் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ரன்களை உயத்தினர். 311 பந்துகளை சந்தித்த மயங்க் அகர்வால் 150 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதேபோல், 128 பந்துகளை சந்தித்த அக்சர் படேல் 52 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். 

அடுத்த வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 325 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி வீரர்கள் இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். தற்போது, 23 ஓவர்கள் நிறைவடைந்த நிலையில், 8 விக்கெட்டுகளை பறிகொடுத்து 59 ரன்கள் மட்டுமே எடுத்து திணறி வருகின்றனர்.

மேலும் செய்திகள்