கன்னியாகுமரி பாரதமாதா கோவிலில் 32 அடி உயரத்தில் சிவபெருமான் சிலை

கன்னியாகுமரி பாரதமாதா கோவிலில் 32 அடி உயரத்தில் சிவபெருமான் சிலை;

Update:2016-12-14 04:15 IST
கன்னியாகுமரி,

கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தகேந்திரா வளாகத்தில் ரூ.25 கோடி செலவில் பாரதமாதா கோவில் கட்டப்பட்டுள்ளது. இங்கு பாரத மாதா மற்றும் ஆஞ்சநேயரின் பிரமாண்ட சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ராமாயண காட்சிகளை விளக்கும் புடைப்பு ஓவியங்களும் இடம் பெற்றுள்ளன.

இந்த நிலையில் பாரத மாதா கோவில் முன்பு நேற்று 32 அடி உயரத்தில் தவக்கோலத்தில் சிவபெருமான் இருப்பது போன்ற சிலை நிறுவப்பட்டது. சிவபெருமான் தலையில் இருந்து கங்கை நதி பாய்வது போல இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை அமைந்துள்ள பீடம் 20 அடியிலும், சிவபெருமான் 12 அடியிலும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த சிலையை சுற்றி 4 அன்னப்பறவைகள் சிலை, 4 யானைகள், 4 கந்தர்வர்கள் சிலைகளும் நிறுவப்பட்டுள்ளன. இதில் இருந்தும் நீருற்று பாய்வது பார்ப்பவர்களை கவரும் வகையில் உள்ளது.

எஸ்.சி. கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிர்வாக இயக்குனர் முருகேசன் இந்த சிலை அமைப்பு பணியில் ஈடுபட்டார். சென்னையை சேர்ந்த சிற்பி பாஸ்கரதாஸ் இந்த சிவன் சிலையை வடிவ மைத்துள்ளார். விவேகானந்தாகேந்திர துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் இந்த பணிகளை பார்வையிட்டார்.

மேலும் செய்திகள்